வேலையை விட்டு நிறுத்திய மருத்துவமனை நிர்வாகம்.. விரக்தியில் பெண் செவிலியர் தூக்கிட்டு தற்கொலை!

 
சொந்த சகோதரனை அடித்தே கொலை செய்த கொடூர அக்கா!! பிணம்

திருவாரூர், நீடாமங்கலம் அருகே நகர் பகுதியில் வசிக்கும் சசிகுமார் மற்றும் வளர்மதி தம்பதியினரின் மகள் ஐஸ்வர்யா, கடந்த 4 ஆண்டுகளாக அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 5 ஆம் தேதி, ஐஸ்வர்யா தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்ததாகவும், நோயாளிக்கு  டிரெஸ்ஸிங் செய்யும் போது கவனக்குறைவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், மருத்துவ உபகரணங்களை மெதுவாக எடுத்துச் சென்றதாகவும், நோயாளிக்கு டிரெஸ்ஸிங்  செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தற்கொலை

மருத்துவமனை மேலாளர் ரம்யா மற்றும் அவரது சக ஊழியர்கள் ஐஸ்வர்யாவை தகாத வார்த்தைகளால் திட்டினர். ஐஸ்வர்யா இனி மருத்துவமனைக்கு வரக்கூடாது, வேலையை விட்டு வெளியேற வேண்டும், இல்லையெனில் உனது கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விடுவோம் என்று ரம்யா கூறினார். மருத்துவமனையில் வேலை செய்வதை நிறுத்தியதால், ஐஸ்வர்யா வீட்டில் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தார். இந்த நிலையில், நேற்று ஜனவரி 08 மாலை ஐஸ்வர்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக அவர் பணிபுரிந்த அதே மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோது, ​​ஐஸ்வர்யாவை பரிசோதித்த மருத்துவர், ஐஸ்வர்யா ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், ஐஸ்வர்யாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

ஐஸ்வர்யாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய ரம்யா மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் சந்தானமேரி, ஐஸ்வர்யாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சம்பவம் குறித்து விவாதித்த பின்னர், முற்றுகையிட்ட அனைவரும் கலைந்து செல்ல அறிவுறுத்தப்பட்டனர். நீடாமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதையடுத்து, நகர பொதுமக்களும் உறவினர்களும் தனியார் மருத்துவமனை முன் கூடி, ஐஸ்வர்யாவின் மரணத்திற்கு மருத்துவமனை மேலாளர் ரம்யா தான் காரணம் என்றும், ரம்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர். இதனால், போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தில் மருத்துவமனை சார்பாக போலீசார் செயல்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதன்படி, போலீசார் ஐஸ்வர்யாவின் உடலை ஆம்புலன்சில் வலுக்கட்டாயமாக ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web