பயங்கரம்... மனைவியை ஓட ஓட விரட்டி கொலை செய்த கணவன்...!!

 
sa sa

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம்   சர்ச் தெருவில் வசித்து வருபவர் ராஜ்குமார். இவருக்கு மீனா என்ற பெண்ணுடன்  10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு   3 குழந்தைகள் உள்ளனர்.  கடந்த ஒரு வருடமாக ராஜ்குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.  நேற்று  காலை பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு மீனா வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

மீனா
 
அப்போது வீட்டிற்கு வந்த ராம்குமாருக்கும் மீனாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ராம்குமார் ஆத்திரத்தில்  மீனாவை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இதனால் பயந்துபோன மீனா, வீட்டை விட்டு வெளியே ஓடிவிட்டார்.   அவரை விடாமல் துரத்தி பின்தொடர்ந்து சென்ற ராம்குமார், மீனாவை கழுத்தில் வெட்டியுள்ளார். 
இதில் பலத்த காயமடைந்த மீனா ரத்த வெள்ளத்தில் சரித்துள்ளார். பின்னர் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் மீனா சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ராம்குமார் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இச்சம்பவம் குறித்து உடனடியாக அக்கம்பக்கத்தினர்   போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

ஆம்புலன்ஸ்


 தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக   அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கொலைக்கு குடும்ப தகராறு தான் காரணமா அல்லது வேறு ஏதும் காரணமா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பியோடிய ராம்குமாரை வலை வீசி தேடி வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!