டர்பண்டைனை மகன், மனைவி மீது ஊற்றி தீவைத்த கணவர்... உடல் கருகி பலி!

 
ராஜேந்திரன்

 திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலா பகுதியில் வசித்து வருபவர் 51 வயது  ராஜேந்திரன் . இவர்  பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். அவரது மனைவி பிந்து . இவர்களுடைய மகன் அமல். 17வயதான அமல் 12ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக  ராஜேந்திரனுக்கும், பிந்துவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது குறித்து பிந்து  போலீசில் புகார் அளித்துவிட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

தீவிபத்து

இந்நிலையில் நேற்று பிந்து, மகனுடன் தன்னுடைய பொருட்களை எடுப்பதற்காக கணவனின் வீட்டுக்கு சென்றார்.அப்போது ராஜேந்திரன் திடீரென பெயிண்டிங் செய்ய பயன்படுத்தும் டர்பன்டைனை மனைவி மற்றும் மகன் மீது ஊற்றி தீ வைத்துவிட்டார். இந்தத் தீ திடீரென ராஜேந்திரனின் உடலிலும்  பிடித்துவிட்டது. இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன்  சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தார்.  

ஆம்புலன்ஸ்

பிந்து, அமல் ஆகியோர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து   போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!