பகீர்... காதல் மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த கணவன்...!!

 
ஷோபா குமாரி

பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தில்  வசித்து வருபவர்  கஜேந்திர யாதவ். இவர், தலைநகர் பாட்னாவில்  அக்டோபர் 19ம் தேதி வியாழக்கிழமை ஹோட்டலில் அறை முன்பதிவு தங்கியிருந்தார்.  அவரை சந்திக்க அவரது மனைவி ஷோபா குமாரி காலையில் அறைக்கு தேடி வந்தார். மனைவி வந்த சில நிமிடங்களிலேயே  கஜேந்திர யாதவ் வெளியே சென்றிருக்கிறார். அப்போது ஹோட்டல் ஊழியரிடம்  காலை உணவு வாங்கிவரப் போவதாகவும் சிறிது நேரத்தில் திரும்பி வந்துவிடுவதாகவும் சொல்லிவிட்டுச் சென்றார்.  

ஷோபா குமாரி

நீண்ட நேரம் ஆகியும்  அறைக்குத் திரும்பவில்லை. இதனையடுத்து  ஹோட்டல் ஊழியர்  அவரது அறைக்குச் சென்று பார்த்தபோது, ​​அங்கு அவரது மனைவி ஷோபா உடலில் ஆடையின்றி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர் நிர்வாகிக்கு தகவல் கொடுத்தார். அவர் உடனடியாக காவல்துறைக்கு அளித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்தனர்.  அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

ஷோபா குமாரி

ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த ஷோபா குமாரி    மாநில காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்தவர் என்பதுகுறிப்பிடத்தக்கது. இக்கொலைச் சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமாகியுள்ள கஜேந்திர யாதவையும் போலீசார் தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண்ணின் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டதாகத் தெரிகிறது  . ஹோட்டல் அறையில்  இருந்து ஆயுதங்களையும் போலீசார் மீட்டுள்ளனர். அவர் ஹோட்டல் அறையில் தனது கணவரை எந்தச் சூழ்நிலையில் சந்தித்தார் என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.  . இந்த வழக்கை மேலும் முறையாக விசாரிக்க சிறப்பு தொழில்நுட்ப குழுக்களையும் காவல்துறை அமைத்துள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web