மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்.. பகீர் பின்னணி !!

 
பூஜா

உத்தரப்பிரதேசம் பரேலியை சேர்ந்தவர் கிருஷ்ணபால் லோதி (40). இவர் அப்பகுதியில் தாதாவாக வலம்வந்து அடிதடி, போதை என்று சுற்றி திரிந்து வந்தார். பல்வேறு வழக்குகளும் இவர்மீது நிலுவையில் உள்ளது. 

கிருஷ்ணபால் லோதி 10 ஆண்டுகளுக்கு முன்னர் பூஜா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். 32 வயதாகும் பூஜா அழகு நிலையம் நடத்துகிறார். இந்த நிலையில், அண்மையில் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் சிக்கிய கிருஷ்ணபால் லோதியை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

பூஜா

சிறையிலிருந்த கணவனை தனது நண்பன் முன்னாவுடன் சேர்ந்து ஒருமுறை சென்று மனைவி பூஜா சந்தித்தார். தன்மீதான வழக்குக்கும், சிறை சென்றதற்கும் மனைவிதான் காரணம் என கிருஷ்ணபால்க்கு சந்தேகம் வளர்ந்தது. சிறையில் இருந்தபடியே வெளியே ஆள் வைத்து மனைவியை உளவு பார்க்க ஆரம்பித்தார்.

அடுத்தமுறை மனைவி தன்னை பார்க்கவந்தபோது, எப்படியாவது தன்னை ஜாமீனில் எடுக்குமாறு கிருஷ்ணபால் லோதி கேட்டுக்கொண்டார். பூஜாவும் சிரமப்பட்டு கணவரை ஜாமீனில் வெளியே எடுத்தார். வீடு திரும்பியதும் முதல்வேலையாக போதையை ஏற்றிய கிருஷ்ணபால் நேராக வீட்டுக்கு சென்று மனைவியை அடித்து துன்புறுத்தினார். 

அதன்பின்னர் சில நாட்கள் கடந்த நிலையில், கிருஷ்ணபால் லோதி தனது மனைவி மீது உள்ள சந்தேகத்தால் அடித்து துன்புறுத்தினார். ஒருநாள் பூஜாவின் நண்பர் முல்லா, கிருஷ்ணபாலை தட்டிக்கேட்டார். இதனால் கோபம் தலைக்கேறிய கிருஷ்ணபால் வீட்டில் மறைத்துவைத்திருந்த கள்ளத் துப்பாக்கியை எடுத்தார்.

பூஜா

இதனை பார்த்த மனைவி வீட்டில் இருந்து வெளியேறி மார்க்கெட் வழியாக தப்பியோடினார். எனினும் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் வைத்து மனைவி பூஜாவை கிருஷ்ணபால் லோதி சுட்டுக்கொன்றார். மேலும், பூஜாவின் நண்பர் முன்னா காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிருஷ்ணபாலை மீண்டும் கைது செய்த போலீசார் அவரிடமிருந்து துப்பாக்கியை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web