குற்றாலம் அருவியில் திடீரென விழுந்த உடும்பு... அல் அலறியடித்து ஓடிய பெண்கள்!

 
குற்றாலம் உடும்பு
குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்த போது, அடித்து வரப்பட்ட உடும்பு ஒன்று திடீரென தண்ணீருடன் விழுந்ததால் அங்கு குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள், பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

தென்காசி மாவட்டத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது. அதுபோல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு, அங்குள்ள இரும்பு கம்பிகள், நடைபாதை வண்ணக்கற்கள் சேதம் அடைந்தன. 

ஒரு யானையும் வெள்ளத்தில் இழுத்து வரப்பட்டு பரிதாபமாக இறந்தது. தற்போது மழை இல்லாததால் அருவிகளில் தண்ணீர் வரத்து சீராக விழுகிறது. அங்கு சுற்றுலா பயணிகள் குளித்து வருகிறார்கள். எனினும் பழைய குற்றாலம் அருவி பகுதியில் நடைபெறும் சீரமைப்பு பணி காரணமாக அங்கு மட்டும் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் தனித்தனியாக குளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, அருவியில் இருந்து ஒரு பெரிய உடும்பு தண்ணீரில் அடித்து வரப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்கும் பகுதியில் விழுந்தது. அதாவது, ஆண்கள், பெண்கள் குளிக்கும் பகுதியில் நடுவே உள்ள தடுப்புச்சுவர் மீது விழுந்தது.

குற்றாலம் உடும்பு

அந்த உடும்பு அங்கும் இங்கும் திரிந்ததால் இதை பார்த்ததும் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 5க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு சுற்றித்திரிந்த உடும்பை லாவகமாக பிடித்து, குற்றாலம் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web