குழந்தை விற்பனை விவகாரம்.. அடுத்தடுத்து வெளிச்சத்துக்கு வந்த பகீர் உண்மை.. தீவிர விசாரணையில் போலீசார்!

 
அஞ்சலி

கோவை மாவட்டம் சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டியில் குழந்தைகளை விற்பனை செய்த அஞ்சலி, அவரது கணவர் மகேஷ்குமார், தாய் பூனம் தேவி, அங்கு ஓட்டல் நடத்தி வரும் தங்கை மேககுமாரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் குழந்தையை வாங்கிய விவசாயி விஜயனும் கைது செய்யப்பட்டார். விஜனிடம் இருந்து 15 நாட்களே ஆன குழந்தை மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 5 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

விஜயன்

அவர்களிடம் நடத்திய விசாரணையில், பீகார் தம்பதி அஞ்சலி, மகேஷ்குமார் ஆகியோர், கடந்த ஆண்டு ஆந்திராவை சேர்ந்த லாரி டிரைவர் ராம்பாபு என்பவருக்கு ஆண் குழந்தையை விற்றது தெரியவந்தது. இதையடுத்து, விற்பனை செய்யப்பட்ட ஆண் குழந்தையை போலீஸார் மீட்டனர். போலீசார் இரு குழந்தைகளையும் மீட்டு சைல்டு லைன் மூலம் பராமரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் ஆந்திராவை சேர்ந்த லாரி டிரைவர் ராம்பாபுவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் ஆந்திர மாநிலம் சென்று லாரி டிரைவர் ராம்பாபுவை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். டிரைவர் ராம்பாபு ஆந்திராவில் இருந்து கருமத்தம்பட்டி அருகே உள்ள தொழிற்சாலைக்கு அடிக்கடி சரக்குகளை ஏற்றிச் செல்வது வழக்கம். அப்போது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்துடன் தொடர்பு கொண்டு குழந்தையை வாங்கி வந்ததும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் பீகார் தம்பதியான அஞ்சலி மற்றும் மகேஷ் குமார் இப்படி குழந்தைகளை வேறு யாருக்காவது விற்றுள்ளார்களா? இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் போலீசார் திட்டமிட்டுள்ளனர். புதன்கிழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கும் போது, ​​குழந்தைகள் வேறு யாருக்காவது விற்கப்பட்டுள்ளதா, இந்த குழந்தைகளை விற்பனையில் வேறு யார் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகும் என போலீசார் தெரிவித்தனர்.

கோவையில் ஒரு மாத குழந்தையை விற்பனை செய்த பீகார் தம்பதியினர் சிக்கியதை அடுத்து, மற்றொரு குழந்தை விற்பனை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web