இந்தியர்களை அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய விவகாரம்.. இந்துஜா குடும்பத்தினருக்கு சிறை தண்டனை விதிப்பு!

 
இந்துஜா குழுமம்

இந்துஜா குழுமம் உலகின் முன்னணி வணிக நிறுவனங்களில் ஒன்றாகும். மேலும் ஆட்டோமொபைல், வங்கி, ஐடி, ரியல் எஸ்டேட் போன்ற பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ளது. இந்தாஜா குடும்பம் ஆசியாவின் முதல் 200 பணக்கார குடும்பங்களில் ஒன்றாகும். இந்துஜா குடும்ப உறுப்பினர்கள் பிரகாஷ் மற்றும் அவரது மனைவி கமால், அவர்களது மகன் அஜய் மற்றும் அவரது மனைவி நம்ரதா ஆகியோர் சுவிட்சர்லாந்தில் வசிக்கின்றனர்.

சட்டவிரோதமாக சில இந்தியர்களை சுவிட்சர்லாந்திற்கு அழைத்துச் சென்று வீட்டு வேலையாட்களாக நியமித்து, குறைந்த சம்பளம் கொடுத்து துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில், பிரகாஷ் மற்றும் அவரது மனைவி கமாலுக்கு தலா நான்கரை ஆண்டுகளும், அஜய் மற்றும் அவரது மனைவி நம்ரதாவுக்கு தலா 4 ஆண்டுகளும் சுவிஸ் நீதிமன்றம் தண்டனை விதித்தது.முன்னதாக இந்த வழக்கின் வாதத்தின் போது, ​​இந்துஜா குடும்பத்தினர் வீட்டு வேலையாட்களின் பாஸ்போர்ட்டை எடுத்து, அவர்களை வீட்டை விட்டு வெளியே வரவிடாமல் தடுத்து, வீட்டின் கீழ் தளத்தில் ஜன்னல் இல்லாத அறைகளில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

பிரான்ஸ், மொனாக்கோ போன்ற நாடுகளுக்குச் சென்றபோது இந்துஜாவின் குடும்பத்தினர் தொழிலாளர்களை அழைத்துச் சென்றதாகவும், அங்கும் இதுபோன்ற கொடுமைகளை சந்திக்க நேரிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்துஜாவின் குடும்பத்தின் வழக்கறிஞர் ரோமெய்ன் ஜோர்டான் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தார், அவை மிகைப்படுத்தப்பட்ட மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்று கூறினார். மேலும் இந்துஜாவின் குடும்பத்தினருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!