அம்...மாடியோவ்... தவெக தலைவர் விஜய் பயணிக்கும் ஜெட் ஒரு நாள் வாடகை... எகிறும் லட்சங்கள்!
தவெக கட்சி தலைவர் நடிகர் விஜய் சமீபகாலமாக தனது பயணங்களுக்கு தனியார் ஜெட் விமானத்தை பயன்படுத்தி வருகிறார். அவ்வப்போது படப்பிடிப்பு மற்றும் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்க விஜய் பல்வேறு ஊர்களுக்கும் பயணிக்க வேண்டி இருப்பதால், நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் அவர் ஒரு தனியார் ஜெட் விமானத்தில் பயணம் செய்து வருகிறார்.

இந்த ஹாக்கர் 800எக்ஸ்பி என்ற ஜெட் விமானம், விஜய்க்கு சொந்தமானது என்று கூறப்பட்டாலும் அது எந்தவிதத்திலும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. பெரும்பாலும், அவர் திரைப்பட படப்பிடிப்புகள், அரசியல் நிகழ்வுகளுக்கு, இந்தியாவுக்குள் பயணம் மேற்கொள்ளும்போது, இந்த ஜெட் விமானத்தையே பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த விமானத்தின் மதிப்பு ரூ.8 கோடி. இதில் ஒரு நாளைக்கு இதில் பயணிக்க வாடகை என்றால், ரூ.14 லட்சம் . இந்த ஜெட் விமானத்தின் உள்ளமைப்புகளை, தலைவர்களுக்கு ஏற்ப நவீன வசதிகளுடன் மாற்றியிருந்தால், அதற்கான விலை இன்னும் சில கோடிகளைத் தொடும் என கூறப்படுகிறது. இது விமானத்தின் விலை மற்றும் வாடகைதான். அது மட்டுமல்லாமல், இந்த விமானத்தின் பராமரிப்பு செலவு, விமானி, பணிப்பெண்களுக்கான ஊதியம் எல்லாம் சேர்த்து வைத்து பார்த்தால் பயன்பாட்டுக் கட்டணமே சில லட்சங்கள் இருக்க கூடும் எனத் தெரிகிறது.
இந்த விமானத்தில் 8-14 பேர் வரை பயணம் செய்யலாம். இதில் சொகுசு நாற்காலிகள், ஆலோசனை அரங்கு, பொழுதுபோக்கு அம்சங்கள், சிறு மதுபானக் கூடம், செயற்கைக்கோளில் இயங்கும் தொலைபேசி வசதிகளும் அமைக்கப்பட்டிருக்கும். இந்த விமான பயணத்துக்கு, 2 விமானிகள், தேவைக்கு ஏற்ப 1 அல்லது 2 பணிப்பெண்கள் இருப்பர். இந்த விமானத்தில் தான் சமீபத்தில் படப்பிடிப்புக்காக கொடைக்கானல் சென்று படப்பிடிப்பு முடித்துவிட்டு, அவர் மதுரையில் இருந்து சென்னைக்குத் திரும்பவும் பயன்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
