சிறுமியைப் பலாத்காரம் செய்து, விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பத்திரிக்கையாளர்.... அதிரடி நவடிக்கை எடுத்த ஆணையர் சத்திய பிரியா!

 
சத்தியபிரியா

காவல் ஆணையர் திருமதி.M.சத்திய பிரியா, இ.கா.ப., அவர்கள், திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை காக்கும் வகையில், சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் ரவுடிகளையும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர்களையும் கண்காணிக்கவும், அவ்வாறு குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் காவல் துணை ஆணையர்கள், சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள்.

பிரபின்

அதன்படி, கடந்த ஜனவரி 25ம் தேதி திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தும், கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்து வருவதாகவும் வந்த தகவலின்படி விசாரணை மேற்கொண்டதில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாக்கியராஜ் மகன் பிரபின் கிறிஸ்டல்ராஜ் வயது 40 மற்றும் திருச்சி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த ரமிஜா பானு வயது 50 ஆகியோர் மீது கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தும், நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில்,  பிரபின் கிறிஸ்டல்ராஜ் கடந்த 15 வருடங்களாக தொலைகாட்சி செய்தி நிறுவனங்களில் நிருபராக வேலைப் பார்த்து, தற்போது "சிலந்தி வலை” என்கிற மாதாந்திர பத்திரிக்கையில் நிருபராக பணிபுரிவதும், மேற்படி ரமீஜா பானுவுடன் சேர்ந்து கொண்டு பல பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அவர்களது வாழ்க்கையை சீரழித்ததும், மேற்படி பாதிக்கப்பட்ட சிறுமியை பல நபர்களுக்கு ஏமாற்றியும், கட்டாயப்படுத்தியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதும், அச்சிறுமியை பிரபின் கிறிஸ்டல்ராஜ் கட்டாயப்படுத்தி, அச்சுறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததும் போலீசாரின் தெரிய வந்துள்ளது.

மாணவி பலாத்காரம்!! ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்!! தமிழக ராணுவ வீரரின் வெறிச்செயல்!!

எனவே, பிரபின் கிறிஸ்டல்ராஜ் மற்றும் ரமீஜா பானு ஆகியோர்கள் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் என விசாரணையில் தெரிய வருவதால், மேற்கண்ட நபர்களின் தொடர் குற்ற நடவடிக்கையைத் தடுக்கும் பொருட்டு கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா அவர்கள் இவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகள் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் திருச்சி மாநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். 

பத்திரிகையாளரை விடுவிக்கக்கோரி பல்வேறு இடங்களில் இருந்து வந்த சிபாரிசு மற்றும் அழுத்தத்தை தாண்டி குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளி இருப்பது காவல்துறை வட்டாரத்தில் பணியாற்றுவோர்க்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளதால் ஆணையருக்கு ராயல் சல்யூட் அடித்து சபாஷ் போடுகின்றனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web