குண்டுவீச்சில் குடும்பத்தையே பலி கொடுத்து அடுத்த நாளே பணிக்கு திரும்பிய செய்தியாளர்!!

 
இஸ்ரேல்

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே கடுமையான போர் நிலவி வருகிறது. இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டுள்ளனர். திரும்பும் திசையெல்லாம் மரண ஓலம் கேட்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் மனதை நிலை குலைய வைக்கின்றன.  குண்டு வீச்சில் தனது மொத்த குடும்பத்தையும் பறிக் கொடுத்த அல்ஜசீரா செய்தியாளர் அல் தஹ்தோ, அடுத்த நாளே தனது பணிக்கு திரும்பியுள்ள தகவல்கள் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.


 

 தினமும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கொத்து கொத்தாக உயிரிழந்து வருவது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அல் ஜசீரா செய்தியாளர் வெயில் அல் தஹ்தோ பணி நிமித்தமாக போர் காட்சிகளை பதிவு செய்து கொண்டிருந்தார். அவரது மனைவி, மகன், மகள் உட்பட குடும்பத்தினர் காஸா பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்த  நிலையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தொடர் குண்டுவீச்சில் தஹ்தோவின் வீட்டின் மீதும் ஏவுகணை ஒன்று விழுந்து வெடித்து சிதறியது.
இதில் அவரது மகள், மகன், மனைவி உட்பட வீட்டிலிருந்த அனைவரும் உயிரிழந்தனர். இது குறித்த தகவல் தஹ்தோவிற்கு தெரிவிக்கப்பட்டது.  தனது குடும்பம் முழுவதையும் ஒரே நேரத்தில் சடலங்களாக மருத்துவமனையில் பார்த்த அவர் கதறி அழுதார் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

இஸ்ரேல்


இந்நிலையில் அவர் அடுத்த நாளே போர்க் களத்தில் இருந்து செய்திகளை வழங்கி வருகிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள  வீடியோவில், ‘’இந்த உலகத்தில் எனது மனைவி, மகன், மகள் மிகவும் முக்கியமானவர்கள். அவர்களை நான் இழந்துவிட்டேன். எனது பணியை நான் மிகவும் நேசிக்கிறேன். இங்கு என்ன நடக்கிறது என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது எனது கடமை. அந்த கடமையை எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தமாட்டேன்’’ எனக் கூறியுள்ளார்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web