இன்று தமிழகத்தில் ”தி கேரளா ஸ்டோரி” ரிலீஸ்!! திரையரங்குகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!!

 
தி கேரளா ஸ்டோரி

'தி கேரளா ஸ்டோரி' என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ள இந்தி சினிமாவின் டீசர் சமீபத் தில் வெளியானது. கேரள இந்து பெண்கள், முஸ்லிமாக மதம் மாறி ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேருவது போன்று படத்தில் காட்சிகள் அமைக்கப் பட்டிருப் பதாக கூறி இந்த படத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த படத்தை கடுமை யாக சாடியிருந்தார்.

தி கேரளா ஸ்டோரி

தமிழகத்தில் இந்த படம் வெளியானால் பிரச் னைகள் வரலாம் என்று மாநில உளவுத்துறை, அரசுக்கு அறிக்கை அளித்தது.இதையடுத்து தமிழகத்தில் இந்த படத்தை வாங்கி வெளியிட யாரும் முன்வரவில்லை. படம் வெளியானால் பிரச்னை ஏற்படலாம் என்பதால் தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.

தி கேரளா ஸ்டோரி

இதனால், தமிழகத்தில் இந்த படம் வெளியாகாது என்று எதிர் பார்க்கப்பட்டது. இதுகுறித்து தியேட்டர் அதிபர்கள் சங்க நிர் வாகியான திருச்சி ஸ்ரீதர் கூறுகையில், தி கேரளா ஸ்டோரி படம் தமிழக தியேட்டர்களில் ரிலீஸ் செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. விரைவில் கலந்து பேசி, உரிய முடிவெடுத்து அறிவிக்கப்படும்" என்றார். அதேசமயம் ஏபி இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் மட்டும் தி கேரளா ஸ்டோரி படத்தின் இந்தி பதிப்பை 25 தியேட்டர்களில் மட்டும் முதல்கட்டமாக இன்று வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web