சரக்கு வாங்குறதுல தகராறு... இளைஞரை அடித்தே கொன்ற திமுக இளைஞரணி பிரமுகர்கள் தலைமறைவு!

 
செல்வராஜ்

கோவை மாதம்பட்டி அடுத்த கரடிமடை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (55). அதே பகுதியைச் சேர்ந்த திமுக இளைஞரணி சேர்ந்த ராகுல் மற்றும் கோகுல் ஆகிய இருவரும் காளம்பாளையம் பகுதியில் மதுபான கடை பார் நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவரும் கரடிமடை ஊருக்குள்ளும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காளம்பாளையம் துபான கூடத்தில் செல்வராஜ் மது வாங்க சென்ற போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து செல்வராஜ் கரடிமடை பகுதிக்கு சென்று விட்டார். எனினும் அவரை பின் தொடர்ந்து வந்த ராகுல் மற்றும் கோகுல் ஆகிய இருவரும் செல்வராஜை அடித்து இழுத்துச் சென்றுள்ளனர்.

செல்வராஜ்

பின்னர் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் வைத்து செல்வராஜை இருவரும் சரமாரியாக தாக்கியதில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் இங்கிருந்து தப்பித்து தலைமறைவாகினர். காலையில் செல்வராஜின் உடல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அதிர்ச்சி அடைந்த மக்கள், பேரூர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். 

செல்வராஜ்

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாகிய திமுக இளைஞரணி பொறுப்பாளர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராகுல் மற்றும் கோகுல் ஆகிய இருவரும் பொதுமக்கள் முன்னிலையில் செல்வராஜை தாக்கி இழுத்துச் சென்றதை பார்த்ததால், இதனை போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web