புகழ்பெற்ற ப்ரெண்ட்ஸ் சீரீஸ் நடிகர் காலமானார்... சோகத்தில் ரசிகர்கள்!

 
மேத்யூ பெர்ரி

புகழ் பெற்ற ப்ரெண்ட்ஸ் சீரீஸ் தொடர்களில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் மேத்யூ பெர்ரி காலமானார். அவருக்கு வயது 54. நண்பர்கள் ஆறு பேரைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை மையமாக கொண்டு சுவாரஸ்யமாக எடுக்கப்பட்ட இந்த தொடருக்கு உலகம் முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. இந்த தொடரின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தவர் மேத்யூ பெர்ரி. இந்தியாவிலும் ரசிகர்களிடையே இந்த தொடருக்கு பெரும் வரவேற்பு இருந்தது. மேத்யூ பெர்ரி, இந்திய ரசிகர்களிடையேயும் பிரபலமடைந்திருந்தார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்  வசித்து வந்த நடிகர் மேத்யூ பெர்ரி அமெரிக்க நேரப்படி நேற்று அதிகாலை 4 மணி அளவில், தனது வீட்டின்  நீச்சல் குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


மேத்யூ, அதிகாலையில் வீட்டிற்கு வந்ததாகவும், தனது உதவியாளரை  வேலை விஷயமாக வெளியே அனுப்பியிருந்ததாகவும், உதவியாளர் வேலையை முடித்து விட்டு, வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது, மேத்யூ நீச்சல் குளத்தில் சடலமாக கிடந்தாக கூறப்படுகிறது. அதன் பின்னர், அவரது உதவியாளர் இது குறித்து 911 உதவி எண்ணிற்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மேத்யூவின் உடலை மீட்டுள்ளனர்.   மேத்யூ, நீச்சல் குளத்தில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும், மேத்யூவின் மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேத்யூ பெர்ரி, ப்ரெண்ட்ஸ் தொடரில் நடித்து கொண்டிருந்த போதே அவருக்கு தீவிரமான போதை பழக்கமும், குடிப்பழக்கமும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தனது போதைப் பழக்கத்தின் காரணமாக, அதிலிருந்து மீள்வதற்கு 19 முறை மறுவாழ்வு மையத்திற்கு மேத்யூ சென்றுள்ளார். ஆனாலும் இறுதி வரையில் அவரால் அந்த பழக்கத்தில் இருந்த மீள முடியவில்லை. இந்த போதை பழக்கத்தினால் பல முறை மேத்யூவிற்கு அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேத்யூ

நண்பர்களாக மூன்று பெண்களும், 3 ஆண்களும் திருமணம் செய்து கொள்ளாமல் பேச்சுலர்ஸாக நியூயார்க்கில் வசித்து வருகிறார்கள். அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்களை வைத்து, நம்மூர் வடிவேலு நடித்த ப்ரெண்ட்ஸ் படத்தைப் போலவே முழுக்க முழுக்க காமெடி தொடராக இது உருவாகியிருந்தது.  இந்த தொடரில் ஆறு பேர் நடித்திருந்தாலும் தனது உடல் மொழியால்  ரசிகர்களை பெரிதும் ஈர்த்தவர் மேத்யூ.

இந்த தொடர் 1994ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் தொலைக்காட்சிகளில் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்தப்படியே தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web