15 மணி நேரம் வீட்டிற்குள் பதுங்கிய சிறுத்தை... அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்!!

 
சிறுத்தை

 தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புத்தாடை, பட்டாசு, இனிப்புக்கள் பலகாரங்கள் , ஷாப்பிங், தியேட்டர் என நாள் முழுவதும் பொதுமக்கள் கொண்டாடி தீர்த்தனர். அந்த வகையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில்  தீபாவளியை கொண்டாடும் வகையில்  அப்பகுதியை சேர்ந்தவர்கள் பட்டாசுகள் வெடித்துக் கொண்டிருந்தனர். வனப்பகுதி அதிகம் என்பதால் வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் நுழைந்துவிடுவது வாடிக்கை தான்.

சிறுத்தை

தானே சில மணி நேரங்களில் மீண்டும் வனத்திற்குள் சென்று விடும். அதே போல் நேற்றும்   வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்கு வந்த சிறுத்தை வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த  நாயை பிடிப்பதற்காக வீட்டிற்குள் நுழைந்தது. வீட்டிற்குள் புகுந்த அந்த சிறுத்தை, 15 மணி நேரமாகியும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிற்குள்ளேயே பதுங்கியது. உடனடியாக அக்கிராமத்தில் வசிப்பவர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.  

பட்டாசு

தகவல் அறிந்த வவனத்துறையினர், மூன்று சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஒரு தானியங்கி கேமராவின்  உதவியுடன் சிறுத்தையின் நடமாட்டத்தை  கண்காணித்தனர். அத்துடன், சிறுத்தையை கூண்டு பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கூறுகையில், "இன்று இரவுக்குள் சிறுத்தை வெளியேறிவிடும். பட்டாசு சத்தத்தால் பயந்து வீட்டிற்குள் தஞ்சம் அடைந்துள்ளது. தொடர்ந்து  சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம்.  
 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web