ரயிலை நிறுத்திய லோகோ பைலட்... அலட்சியமாக இருந்த கேட் கீப்பர் பணியிடை நீக்கம்!
திருவண்ணாமலை மாவட்டம் தண்டரை - திருக்கோவிலூர் இடையிலான சாலையில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த பகுதியை நாகர்கோவிலில் இருந்து கச்சிக்குடா செல்லும் ரயில் கடக்க முற்பட்டது.

அப்போது ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததை லோகோ பைலட் கண்டார். இதைக்கண்டு சுதாரித்துக்கொண்ட லோகோ பைலட், ரயிலை உடனடியாக நிறுத்தினார்.

இதையடுத்து தானே கீழே இறங்கிச்சென்று ரயில்வே கேட்டை மூடினார். இதன் பின்னர் அவர் ரயிலை இயக்கிச் சென்றார். ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் அலட்சியமாக செயல்பட்ட கேட் கீப்பர் மீது லோகோ பைலட் அளித்த புகாரின் அடிப்படையில் கேட் கீப்பர் ராமு தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
