மதுரைக்காரைங்க தான் டாஃப்பு! 2 நாட்களில் ரூ.467 கோடி வசூல்!

 
டாஸ்மாக்

தமிழகத்தில் எப்போதுமே தீபாவளி விற்பனையில் டாஸ்மாக் சேல்ஸை எகிற செய்வதில் மதுரைகாரைங்க தான் முதல் ஆளாக நிற்கிறார்கள். இந்த வருடமும் தீபாவளி டாஸ்மாக் வசூலில் மதுரை தான் முதலிடத்தில் நிற்கிறது. நீங்க சேல்ஸைப் பத்தி கவலைப்படலைன்னா என்ன? எங்களுக்கு பொறுப்பு இருக்கு இல்ல? என்று தமிழகம் முழுவதும் தீபாவளி விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் கொண்டாடித் தீர்த்துள்ளனர் குடிமகன்கள். இந்த வருட தீபாவளி விற்பனை டாஸ்மாக் கடைகளில் 467 கோடிகளை தாண்டியுள்ளது. இந்த தீபாவளி விடுமுறை 2 நாட்களுக்கான தமிழக விற்பனை ரூ.467.69 கோடி.

தீபாவளிக்கு முதல் நாளான நவம்பர் 11ம் தேதி மது விற்பனையில் மதுரை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழக அரசுக்கு நிதி வருவாயை ஈட்டி தருவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது டாஸ்மாக் கடைகள்தான். அதிலும் முக்கியமாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மட்டும் பல நூறு கோடிகள் வருமானம் காரணமாக அரசுக்கு பெரும் நிதி வருவாயை அள்ளி கொடுத்து வருகிறது.

தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் கடந்த வருடம் 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது. ஒவ்வொரு வருடமும் முக்கிய பண்டிகையை முன்னிட்டு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு அவ்வாறு எந்த இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

டாஸ்மாக்

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில் ரூ.467.69 கோடிக்கு மது விற்பனையானதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நவ.11ம் தேதி மது விற்பனையில் மதுரை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. மதுரை-ரூ.52.73 கோடி, சென்னை-ரூ.48.12 கோடி, கோவை-ரூ.40.20 கோடி, திருச்சி-ரூ.40.02 கோடி, சேலம்-ரூ.39.78 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

நவ.12ம் தேதி மது விற்பனையில் திருச்சி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருச்சி-ரூ.55.60 கோடி, சென்னை-ரூ.52.98 கோடி, மதுரை-ரூ.511.97 கோடி, சேலம்-ரூ.46.62 கோடி, கோவை-ரூ.39.61 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு 464 கோடிக்கு விற்பனையான நிலையில் இந்த ஆண்டு 467 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web