121 பேர் பலியான ஹத்ராஸ் சத்சங்கத்தின் முக்கிய அமைப்பாளரை தட்டித் தூக்கிய காவல்துறை!

 
ஹாத்ராஸ் மதுக்கர்
 

 

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஹத்ராசில் நடைபெற்ற சத்சங்கத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர்   பலியாகினர். இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை  காவல்துறை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த 6 பேரும்  சத்சங்கத்தை நடத்துவதில் ஈடுபட்டிருந்த ஏற்பாட்டுக் குழுவில் அங்கம் வகித்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 ஹத்ராஸில் சாமியார் நாராயண் சாகர் ஹரி அல்லது 'போலே பாபா' சத்சங்கம் நடத்தினார் . இந்த சத்சங்கத்தை நடத்துவதில் மும்மூரமாக இருந்த 'முக்ய சேவதர்' தேவ் பிரகாஷ் மதுகர் முக்கிய குற்றவாளியாக காவல்துறையால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.  

ஹத்ராஸ்

முன்னதாக, மதுகரின் இருப்பிடம் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என போலீசார் அறிவித்திருந்தனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள காவல்துறை 80,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்திருந்தது. ஆனால்  2.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மதக் கூட்டத்தில் கலந்துகொண்டதாக எஃப்ஐஆர் கூறுகிறது .சத்சங்க அமைப்பாளர்கள் நிகழ்வில் இருந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை மற்றும்  ஆதாரங்களை மறைத்து ஆதரவாளர்களின்  செருப்புகள் மற்றும் பிற பொருட்களை அருகிலுள்ள வயல்களில் வீசினர்.

ஹத்ராஸ்
சத்சங்கம் முடிந்ததும் பெருந்திரளான  பக்தர்கள் சாமியாரின் கால்களில் இருந்து மண்ணை சேகரிக்கவும், அவரிடம் ஆசிபெறவும் முண்டியடித்தனர். அப்போது தான் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.  அவரிடம் ஆசிர்வாதம் வாங்கினால் நோய்கள் குணமாகும், வாழ்வு சீராகும் என நம்பி  ஒருவர் பின் ஒருவராக விழுந்தார்கள், அவர்களின் உடல்கள் ஒருவருக்கொருவர் மேல் கிடந்தன என்பதிலிருந்து இதனை அறிந்து கொள்ள முடிந்தது.  நாராயண் சகார் ஹரியின் பின்னணி குறித்த தகவல்களை போலீசார் தீவிரமாக சேகரித்து வருகின்றனர்.

 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web