’தன்னுடைய இறப்பு சான்றிதழுடன் அலுவலகத்திற்கு வந்த நபர்’.. அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்!

 
கணபதி

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த 62 வயது முதியவர் ஒருவர் இறப்புச் சான்றிதழுடன் துணை ஆணையர் அலுவலகத்துக்கு வந்தார். கணபதி ககட்கர் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், தனது இறப்புச் சான்றிதழுடன் பெலகாவி துணை ஆணையர் முகமது ரோஷனின் அலுவலகத்திற்குச் சென்றார். டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் செய்த சிறு பிழையால் கணபதி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கணபதி தனது ஆதார் அட்டை, வங்கி கணக்கு மற்றும் அரசின் பல்வேறு சலுகைகளை இழந்தார்.

கணபதியும் அவரது சகோதரர்களும் 1976 இல் மறைந்த தங்கள் தாத்தா விட்டுச் சென்ற நிலத்திற்கு வாரிசுச் சான்றிதழுக்காக விண்ணப்பித்ததில் இருந்து பிரச்சினை தொடங்கியது. அவர் இறந்த பிறகு நிலம் ஒருபோதும் மாற்றப்படவில்லை, இறுதியில் அவரது மூன்று மகன்களும் சொத்தை கணபதி உட்பட அவரது  எட்டு பேரன்களுக்கு விட்டுவிட்டனர்.  நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றும் முயற்சியில், பேரன்கள் தங்கள் தாத்தாவின் இறப்பு சான்றிதழ் காணாமல் போனதால் தாமதத்தை எதிர்கொண்டனர். இதையடுத்து நீதிமன்றத்தை அணுகினர். புதிய இறப்பு சான்றிதழ் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொலை

ஆனால், ஹிண்டல்காவில் உள்ள வருவாய் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஒருவர் மறைந்த தாத்தாவின் ஆதார் எண்ணுக்கு பதிலாக கணபதியின் ஆதார் எண்ணை தவறுதலாக பதிவு செய்துள்ளார். இதனால், குடும்ப ரேஷன் கார்டில் இருந்து கணபதியின் பெயர் நீக்கப்பட்டு, ஆதார் பூட்டப்பட்டது. இப்பிரச்னைக்கு தீர்வு காண பலமுறை முயன்றும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 2023ல் எழுத்தர் செய்த தவறை கணபதி கண்டுபிடித்தார்.ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், திங்கள்கிழமை கணபதி தனது குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞருடன் துணை கமிஷனர் ரோஷனை அணுகினார். இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web