பீடி பிடித்துவிட்டு ஆம்னி பேருந்துக்கு தீ வைத்தவர் ... பகீர் சிசிடிவி காட்சிகள்!

 
பழனிமுத்து
 

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் செயல்பட்டு வருகிறது உலகத்தரம் வாய்ந்த கோயம்பேடு மார்க்கெட். இங்கிருந்து தான் சென்னையின் மற்ற பகுதிகளுக்கு காய்கறிகள், பழங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து இவை கொள்முதல் செய்யப்பட்டு கோயம்பேடு வந்து சேர்கின்றன. 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த மார்க்கெட்டின் பின்புறத்தில் “ஏ” சாலையில்  சி.எம்.டி.ஏ-வுக்கு சொந்தமான கட்டண வாகன நிறுத்தும் இடம் உள்ளது.


இங்கு நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பேருந்தில்  நேற்று மாலை திடீரென கரும்புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. காற்றின் வேகம் காரணமாக அருகில் நிறுத்தியிருந்த   2 ஆட்டோக்கள் மீதும் தீ பரவியது. தகவல் அறிந்து உடனடியாக விரைந்து வந்த கோயம்பேடு தீயனைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்தனர். இதில் ஆம்னி பேருந்து  மற்றும் 2 ஆட்டோக்களும் முழுவதும் எரிந்து நாசமானது.


தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது ஆம்னிபேருந்து  தீப்பிடித்து எரிவதற்கு முன்பு மர்மநபர் ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கி வருவது பதிவாகி இருந்தது. கோயம்பேடு மார்கெட்டில் பதுங்கி இருந்த அவரை  தனிப்படை போலீசார் நேற்று இரவு மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் அரியலூர் மாவட்டத்தில் வசித்து வரும் 45 வயது  பழனி முத்து  என்பது தெரிய வந்தது. கோயம்பேடு மார்கெட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வரும் அவர் பேருந்தில் அமர்ந்து பீடி பிடித்துவிட்டு அதை அணைக்காமல் அப்படியே போட்டு விட்டு அங்கிருந்து சென்றுள்ளார் எனத்  விசாரணையில் தெரியவந்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web