காதலிச்சவனே புருஷன்.. ஆனாலும் பிரச்சனை தீரலை... இளம்பெண் உயிரிழப்பு; கணவர் கைது!
நாகர்கோவில் அருகே காதலித்து திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்.
கீழ்மறவன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த செல்வச் சரண் (25) டிரைவர். அவருடைய மனைவி ரேஷ்மா (20). கடந்த 2023ம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டு, அதே பகுதியில் வசித்து வந்தனர்.

திருமணத்திற்கு பின் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது மனஉளைச்சலுக்கு ஆளான ரேஷ்மா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
இது குறித்த தகவல் அறிந்த கோட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். திருமணமாகி இரண்டு ஆண்டுக்குள் இழப்பு நிகழ்ந்ததால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடத்தப்பட்டது.

தற்கொலைக்கு முன் ரேஷ்மா தன் தாயாருக்கு வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. அதில் கணவன் மீண்டும் திருமணம் செய்ய உள்ளதாக குற்றம் சாட்டியதும், தாம் செய்த காதல் தவறு என மனஅழுத்தத்துடன் பேசியதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
விசாரணையின் அடிப்படையில் ரேஷ்மாவை தற்கொலை செய்ய தூண்டியதாக போலீசார் செல்வச் சரணை கைது செய்தனர். பின்னர் அவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
