போலீசாரிடமே கைவரிசை காட்டிய ஆசாமி.. செல்போன் கொள்ளையனுக்கு விழுந்த தர்ம அடி!

 
செல்போன் திருட்டு

மாங்காடு அடுத்த சக்தி நகர் லட்சுமி புரம் சாலையில் வளர்மதி என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மொபட்டில் வந்த 2 வாலிபர்கள் வளர்மதி அருகே சென்று அவர் கையில் இருந்த செல்போன் பையை பறித்துக்கொண்டு தப்ப முயன்றனர்.அவர் சத்தம் போட்டதையடுத்து, அங்கிருந்தவர்கள் இருவரையும் பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில், ஒருவர் தப்பி ஓடிய போது, பிடிபட்ட நபரை பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அயனாவரத்தை சேர்ந்தவர் என்று கூறினார்.

மொபைல் திருட்டு

மேலும், அவரை சோதனையிட்டபோது, அவரது சட்டைப் பையில் ஐந்துக்கும் மேற்பட்ட செல்போன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் பிடிபட்ட நபரை மாங்காடு போலீசில் ஒப்படைத்துள்ளனர். பின்னர் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.இந்த விசாரணையில், அயனாவரத்தில் இருந்து அந்த வழியாக சென்றவர்களிடம் செல்போன்கள் பறிக்கப்பட்டதும், மதுரவாயல் போக்குவரத்து போலீசார் ஒருவரிடம் இருந்து செல்போன்களை பறித்ததும் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து மதுரவாயல் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரையும், மொபட்டையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பியோடிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web