உயிருக்கு போராடியவரை காப்பாற்றமால் சட்டை பையை தடவி பார்த்த கொடூரம்.. ஆட்டோ ஓட்டுனர் கைது!
தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (வயது 47). இவர் இரு தினங்களுக்கு முன் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கரட்டாங்குளம் பகுதியில் இரவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது பின்னால் வந்த ஆட்டோ மோதியதில், தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயம் அடைந்து, அரை மணி நேரத்திற்கும் மேலாக உயிருக்கு போராடி சாலையில் கிடந்தார்.
இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ டிரைவர் உயிருக்கு போராடியவரை காப்பாற்றாமல் ஆட்டோவில் இருந்து இறங்கி காயம் அடைந்தவரின் சட்டை பாக்கெட்டில் இருந்த பொருட்களை எடுத்து ஆட்டோவை விட்டு சென்றார். அதேபோல், சாலையில் நடந்து சென்ற அவரை காப்பாற்றும் எண்ணம் இல்லாமல், சட்டைப் பையில் இருந்து எதையோ எடுத்துக்கொண்டு சென்றது அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அதேபோல் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் காயம் அடைந்தவரை காப்பாற்றும் எண்ணம் இல்லாமல் கடந்து செல்வது மனிதாபிமானத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் தகவல் அறிந்து வந்த கடையநல்லூர் போலீசார் உயிருக்கு போராடி கொண்டிருந்த கல்யாணசுந்தரத்தை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மூளைச்சாவு அடைந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்தனர். அதன்படி, உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு உரிய முறையில் அடக்கம் செய்வதற்காக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடலுக்கு தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா அரசு சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில், கடையநல்லூர் போலீஸார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப் பதிந்து விபத்து ஏற்படுத்திய மேலக்கடையநல்லூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!