அதிர்ச்சி... ஏடிஎம்.மிஷினில் பணம் நிரப்ப சென்றவர் ரூ.37 லட்சத்தைத் திருடிவிட்டு தப்பிய கொடுமை!

 
பணம் நிரப்பும் முறை

ஏடிஎம் மிஷினில் பணம் நிரப்புவதற்காக சென்ற போது, ஏடிஎம் உள்ளே மிஷினில் ஊழியர்கள் பணத்தை நிரப்பிக் கொண்டிருந்த போது, வண்டியில் இருந்த ரூ.38 லட்சம் ரூபாயை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று, லாட்ஜில் பதுங்கியிருந்த தனியார் நிறுவன செக்யூரிட்டியை போலீசார் கைது செய்து பணத்தை மீட்டனர்.
சென்னை வேளச்சேரியில் செயல்பட்டு வரும் ‘ஹிட்டாச்சி கேஷ் மேனேஜ்மெண்ட்’ எனும் நிறுவனம் பல்வேறு வங்கிகளின்  ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் பணியினை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வழக்கம் போல் நேற்று இந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பல லட்சம் ரூபாயை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்ப கொண்டு சென்றனர். 

பணம்
வேளச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 10 இடங்களில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை லோடு செய்து விட்டு பின்னர் மீதமிருந்த 5 பணப் பைகளுடன் ஊரப்பாக்கம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்மிற்குள் சென்றனர். 
ஊழியர்கள் ஏடிஎம் மிஷினில் பணத்தை லோடு செய்து கொண்டிருந்த போது, காவலுக்கு சென்ற ஞானசேகரன் என்பவர், வேனில் மீதமிருந்த ரூ.37.71 லட்சம் அடங்கிய பணப்பையைத் திருடிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் தப்பியோடி விட்டார். பணத்தை நிரப்பி விட்டு, வாகனத்திற்கு வந்த ஊழியர்கள் காவலாளி இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் வேனிலும் பணப்பையைக் காணாத நிலையில், இது குறித்து உடனடியாக மேலாளர் அரவிந்தனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அரவிந்தன் இது குறித்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஞானசேகரன்(45) பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. 

பணம் பறிமுதல்
உடனே  ஞானசேகரன் வீட்டிற்குச் சென்று அவரது மனைவியிடம் விசாரணை மேற்கொண்டதில், ஞானசேகரன் திருவான்மியூரில் தனியார் விடுதி ஒன்றில் பதுங்கி இருந்தது தெரிய வந்து, அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 38 லட்ச ரூபாயை பறிமுதல் செய்த பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web