குழந்தைகளை அழைத்து செல்ல வந்த தாய்.. மனசாட்சியே இல்லாமல் கழுத்தை நெரித்து கொன்ற கணவர்.. அதிர்ச்சி பின்னணி!
மும்பை மீரா ரோட்டில் வசித்து வருபவர் நதீம் அகமது. இவரது மனைவி அம்ரீன் கான். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். அம்ரீன் பாந்த்ரா தனது குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பெற்றோரின் வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்த அம்ரீன், குழந்தைகளின் பாதுகாப்பு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து குழந்தைகளை அம்ரீனிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி, அம்ரீன் பாந்த்ரா தனது கணவரிடம் இருந்து குழந்தைகளை அழைத்துச் செல்ல வந்தபோது, வீடு பூட்டியிருப்பதைக் கண்டார். அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது, எதுவும் தெரியவில்லை என கூறியுள்ளனர். அதே சமயம் வீட்டுக்கு வந்த நதீம் அகமது, குழந்தைகள் பாட்டியுடன் சென்று விட்டதாக கூறினார். இதனால் சந்தேகமடைந்த அம்ரீன் தனது மகள் படிக்கும் பள்ளியை தேடி சென்றார்.
அங்கு கத்தியுடன் வந்த நதீம் அகமது அம்ரீனை பார்த்ததும் கோபமடைந்தார். இருவருக்கும் நடுரோட்டில் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், நதீம் அகமது அம்ரீனை கத்தியால் குத்தி கழுத்தை அறுத்தார். இதில் அம்ரீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நதீம் அகமது அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோது, அப்பகுதி மக்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த கொடூர சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!