வீட்டுக்கு வந்து திட்டிய மாமியார்.. ஆத்திரத்தில் தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொண்ட மருமகன்!

 
சபீன்

சென்னை ஓட்டேரி எஸ்விஎம். நகர் பகுதியில் ஜாகிர் உசேன் (40) - சபீன் என்ற தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்னர். ஜாகிர் உசேன் கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வார்டு பாயாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், சபீன் கடந்த வாரம் வேலைக்காக துபாய் நாட்டுக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் ஜாகிர் உசேன், அவரது இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். ஜாகிர் உசேன் வீட்டில் மதுபோதையில் இருந்த போது அவரது மாமியார் சபேதா அங்கு வந்துள்ளார்.

சபீன்

அப்போது, மனைவியை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பி விட்டு வீட்டில் அமர்ந்து இப்படி குடித்துக் கொண்டு இருக்கிறாயே.. என்று  திட்டியுள்ளார். இதனை தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஜாகிர்உசேன் தனது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, கோபத்தில் தனது வயிற்றில் சரமாரியாக குத்திக் கொண்டார். 

சபீன்

பின்னர் ரத்தவெள்ளத்தில் விழுந்த ஜாகிர் உசேன் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியில் கூச்சலிட்ட மாமியார் சபேதா அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். பின்னர் உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சேர்த்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக தலைமைச் செயலக காலனி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web