இஸ்லாமிய தம்பதி குழந்தையின் பெயர் மகாலட்சுமி... நெகிழ்ச்சி !

 
ரயிலில் குழந்தை


மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் மிராரோடு பகுதியில் வசித்து வருபவர்  பாத்திமா காதுன்.  ஜூன் 6ம் தேதி நிறைமாத கர்ப்பிணியாக  பிரசவத்திற்காக  கணவருடன் கோலாப்பூரில் இருந்து மும்பைக்கு மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று கொண்டிருந்தார்.  ரயிலில் அசௌகர்யமாக உணரவே  பாத்திமாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அங்கேயே அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்த நிலையில் சக பெண் பயணிகள் அவருக்கு உதவி செய்தனர். இது குறித்து ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாக  ரயில்வே போலீசார் மற்றும் ஊழியர்கள் தாய் மற்றும் சேயை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

குழந்தை

3   நாட்களுக்குப் பிறகு  அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்.இந்நிலையில் ஃபாத்திமா முஸ்லீமாக இருந்தாலும் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயிலில் பிறந்த குழந்தைக்கு மகாலட்சுமி என பெயரிட்டுள்ளனர். ரயிலில் திருப்பதியில் இருந்து மகாலட்சுமி கோவிலுக்கு சென்று கொண்டிருந்தவர்கள்  தனது குழந்தையை பார்த்து கோவிலுக்கு செல்லும் முன்பே ரயிலிலேயே மகாலட்சுமியின் தரிசனம் தங்களுக்கு கிடைத்து விட்டதாக கூறினர்.  அதனால் தான் குழந்தைக்கு மகாலட்சுமி என பெயர் சூட்டியதாக பாத்திமா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!