கடித்து குதறிய மர்ம விலங்கு.. பரிதாபமாக பலியான 3 ஆடுகள்.. கதறும் உரிமையாளர்!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி அய்யாசாமி வட்டம் பகுதியை சேர்ந்தவர் மணி என்பவர் 6 ஆடுகள் வளர்த்து வருகிறார்.இதனையடுத்து நேற்று வழக்கம் போல ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று 6 ஆடுகளையும் ஆட்டு கொட்டகையில் கட்டி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் காலையில் வீட்டிலிருந்து மணி என்பவர் ஆடுகளை அவிழ்த்து விட சென்றுள்ளார்.
அப்போது மூன்று ஆடுகள் மர்ம விலங்கு கடித்து அங்கியே உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.பின்னர் இச்சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்து சிறுத்தை கடித்து உயிரிழந்து இருக்குமா என பெரும் அச்சத்தில் உள்ளனர்.மேலும் இச்சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!