கேரளம் -ஆக பெயர் மாற்றம் செய்யப்பட்ட கேரளா... சட்டப்பேரவையில் தீர்மானம் !

 
கேரளம்


கேரளா  தமது மாநிலத்தின் பெயரை மலையாள சொல் வரும்படி கேரளம் என மாற்றி அமைக்க வேண்டும் என தொடர் கோரிக்கைகளை வைத்து வருகிறது. ஆனால்  மத்திய அரசு பதிவேடு உள்ளிட்ட அனைத்து அரசு பதிவேடுகளிலும் கேரள மாநிலத்தின் பெயர் கேரளா எனவே பதிவாகியுள்ளது. கேரளம் ஆக மாற்ற  அம்மாநில அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. 2023ல்  ஆகஸ்ட் 9ம் தேதி இதே கேரளா மாநில சட்டமன்றத்தில்   முதல்வர் பினராயி விஜயன் இதற்கான  தீர்மானத்தை கொண்டுவந்து நிறைவேற்றினார்.  

பினராயி விஜயன்

அதனை மத்திய அரசின் பரிந்துரைக்கு அனுப்பி வைத்தார்.  பல்வேறு நிர்வாக திருத்தங்கள் கொண்டுவர உள்ளதால் நடைமுறை சிக்கல் இருக்கிறது என கூறி கேரளா மாநிலத்தின் தீர்மானம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.நேற்று ஜூன் 24ம் தேதி திங்கட்கிழமை கேரளம் என பெயர் மாற்றத் தீர்மானம் சட்டப்பேரையில் நிறைவேற்றப்பட்டது.  

இன்று முதல் தமிழ்நாடு – கேரளா இடையே போக்குவரத்து தொடக்கம்..!!

இதுகுறித்து அந்த தீர்மானத்தில் குறிப்பிடுகையில், இந்திய அரசியலமைப்பு அட்டவணை 1ல் இந்த திருத்தத்தை கொண்டு வரவேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 3ஐ பயன்படுத்தி இந்த திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என கேரள மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!