கடற்படை தான் படகு விபத்து பலிக்கு முழு பொறுப்பு... படகின் உரிமையாளர் பரபரப்பு பேட்டி!
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையின் கேட் ஆப் இந்தியா பகுதியில் நேற்று மாலை எலிபெண்டா தீவுக்கு 'நீல் கமல்' என்ற பயணிகள் படகு சென்றுகொண்டிருந்தது. அந்த பகுதியில் அதிவேகமாக வந்த கடற்படை படகு, பயணிகள் படகு மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் பயணிகள் படகு கடலில் கவிழ்ந்தது. படகில் இருந்த பயணிகள் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர்.
கடலில் தத்தளித்த 99 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால், இந்த விபத்தில் 13 பேர் பலியாகினர். மும்பை படகு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் மோடி தலா ரூ 2 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். படுகாயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
#WATCH | Mumbai Boat Capsize: ‘Boat Turned Upside Down While I Was Still Putting On Life Jacket,’ Says Ashok, A Survivor
— Free Press Journal (@fpjindia) December 18, 2024
Video by: Salman Ansari (@vssalman007)#MumbaiNews #GatewayOfIndia #Maharashtra #MumbaiBoatCapsize pic.twitter.com/JtHYRTWAKX
இந்த கோர விபத்து குறித்து 'நீல்கமல்' படகின் உரிமையாளர் , "கடற்படைக்கு சொந்தமான அதிவிரைவு படகு தான் எனது படகை சேதப்படுத்தியது. இதன் காரணமாக தான் எனது படகு கடலில் மூழ்கியது. இதற்கு கடற்படை இழப்பீடு வழங்க வேண்டும். கடலில் மூழ்கிய எனது படகில் பழுதும் கிடையாது. விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைக்கு சொந்தமான அதிவிரைவு படகு தான். எனது படகில் ஜே.என்.பி.டி. துறைமுகம், உரண், எலிபெண்டா தீவு போன்ற இடங்களுக்கு அடிக்கடி சுற்றுலா பயணிகளை ஏற்றிச்செல்கிறேன். படகில் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் முழு அளவில் பக்காவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன" எனக் கூறியுள்ளார்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!