புதுமாப்பிள்ளை... நண்பர்களுடன் சேர்ந்து கணவனை கழுத்தை இறுக்கி கொன்ற மனைவி!

 
சுஜாதா

புதுமாப்பிள்ளை ஒருவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ம்காவேரிப்பட்டணம் அருகே கழுத்து நெரிக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணையில், மனைவியே நண்பர்களுடன் சேர்ந்து தனது கணவனின் கழுத்தை நெரித்து கொலைச் செய்தது அம்பலமானது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் பாளேகுளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்குமார் (26). ஓசூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த ராம்குமாருக்கும் சூளகிரியைச் சேர்ந்த சுஜாதா (23) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பின்பு கணவன் - மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், இந்த தகராறு குறித்து நாகரசம்பட்டி காவல் நிலையத்துக்கு புகார் சென்று போலீசார் இருவரையும் அழைத்து பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலையில் ராம்குமார் தலையில் ரத்தக் காயங்களுடனும், ஒயரால் கழுத்து இறுக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக நாகரசம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

காதல்… கல்யாணம்… தனிக்குடித்தனம்!! இளம்பெண்ணை ஏமாற்ற முயன்ற VAO!! தர்ணாவில் இறங்கிய காதலி!!

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராம்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்னர். இதற்கிடையே கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததால் சந்தேகத்தின் பேரில் போலீசார், சுஜாதாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது திருமணமானது முதல் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சுஜாதா தனது கணவன் மீது கோபத்தில் இருந்துள்ளார். காவல் நிலையம் வரை தகராறு விவகாரம் சென்றதால் ஆத்திரமடைந்த அவர், தனது கணவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதற்காக சூளகிரியை பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான கணேசன் (19), மோகன் (18) ஆகியோரின் உதவியை நாடினார். அவர்களும் கொலை செய்ய சம்மதம் தெரிவித்தனர்.

பள்ளி மானவி தற்கொலை

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ராம்குமார் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். அப்போது கணேசன், மோகன் ஆகியோர் சுஜாதா வீட்டிற்கு வந்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் சேர்ந்து தூங்கி கொண்டிருந்த ராம்குமாரின் கழுத்தை ஒயரால் இறுக்கினர். மேலும் தலையில் பயங்கரமாக தாக்கினர். இதில் ராம்குமார் ரத்த கயங்களுடன்  சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து கணேசன், மோகன் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

பின்னர் கொலையை மறைப்பதற்காக சுஜாதா தனது கணவன் வாயில் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதாக அழுது நாடகமாடி உள்ளார். எனினும் அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சுஜாதா, கணேசன், மோகன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web