மக்களை கோபப்படுத்திய புதிய சட்டம்.. நியூ கலிடோனியாவில் வெடித்த வன்முறை!

 
நியூ கலிடோனியா

நியூ கலிடோனியா பிரெஞ்சு கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தீவு. பிரான்சில் இருந்து 17,000 கி.மீ. தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள இப்பகுதி மூன்று மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இது நியூ கலிடோனியாவின் பழங்குடியான கனக் மக்கள், ஐரோப்பிய குடியேற்றவாசிகளின் வழித்தோன்றல்களுக்கு தாயகமாக உள்ளது. இந்த பகுதி 1853 இல் பிரான்சுடன் இணைக்கப்பட்டது. இருப்பினும், பல நூற்றாண்டுகளாக இப்பகுதியின் பூர்வீக குடிமக்களான கானாக் பழங்குடி மக்களுக்கும் பிரெஞ்சு மக்களுக்கும் இடையே மோதல் இருந்தது. இந்நிலையில், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நேற்று புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. 

கலிடோனியாவில் 10 ஆண்டுகளாக வசிக்கும் பிரெஞ்சு குடியிருப்பாளர்கள் மாகாணத் தேர்தலில் வாக்களிக்க சட்டம் அனுமதிக்கிறது. சில உள்ளூர் தலைவர்கள் இந்த சட்டத்தை எதிர்த்தனர். புதிய சட்டம் உள்ளூர் கனக் வாக்குகளை நீர்த்துப்போகச் செய்யும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். கனக் மக்கள் ஓரங்கட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தப் பிரச்னை தீவிரமடைந்ததால், நியூ கலிடோனியா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. கனக் பழங்குடியின மக்களின் உரிமைகளை சட்டம் புறக்கணிக்கும் என்று கூறி கனக் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டங்களில் கலவரம் வெடித்தது.

பிரெஞ்சு கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஓட்டல்கள், கடைகள் மூடப்பட்டதால் பல நகரங்கள் போர்க்களம் போல் காட்சியளித்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரெஞ்சு பேருந்துகள் மற்றும் வாகனங்களையும் சேதப்படுத்தினர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். கலவரத்தில் 3 கனக் இளைஞர்கள் மற்றும் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். வன்முறையில் ஈடுபட்டதாக 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையை தொடர்ந்து போராட்டத்தை கட்டுப்படுத்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தலைநகர் நௌமியாவில் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசர நிலை 12 நாட்களுக்கு நீடிக்கும் என்று கூறப்படுகிறது. வன்முறை மற்றும் வதந்திகளைத் தடுக்க அதிகாரிகள் டிக்டோக் செயலியைத் தடை செய்துள்ளனர். நியூ கலிடோனியாவில் உள்ள இரண்டு விமான நிலையங்களும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன. போராட்டத்தை தூண்டியதாக சந்தேகிக்கப்படும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தை கட்டுப்படுத்த பிரான்சில் இருந்து அதிகளவான போலீஸாரும் பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், நியூ கலிடோனியாவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web