தாலி மஞ்சவாசம் மாறலையே... கல்யாணமாகி 4 நாள் தான்... புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை!

 
லோகேஸ்வரி


 
தமிழகத்தில் வரதட்சனை கொடுமையால்  அடுத்தடுத்து  தற்கொலை சம்பவங்கள் நடைபெற்று பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே திருமணமான 4வது நாளில் 24 வயது லோகேஸ்வரி  என்ற புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆம்புலன்ஸ்

 
ஜூன் 27 ம் தேதி  பெண்ணுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் கணவருடன் மறுவீட்டிற்காக தனது தாய் வீட்டிற்கு நேற்று வந்தபோது பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.   இருசக்கர வாகனம், ஏசி, கூடுதல் நகை கேட்டு தொல்லை கொடுத்ததாக லோகேஸ்வரி குடும்பத்தினர் மாப்பிள்ளை வீட்டார் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
 உத்தரபிரதேச போலீஸ்
இந்நிலையில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  அதேவேளை திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் திருமணம் ஆன 78 நாட்களில் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அடுத்து  பொன்னேரியில் மீண்டும் ஒரு  தற்கொலை சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும்  ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

 

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?