கல்யாணமாகி ஒரு மாசம் கூட ஆகல... பீச்சில் வயிறு வலிப்பதாக கூறி காதலனுடன் எஸ்கேப் ஆன புதுமணப்பெண்!
திருவள்ளூர் மாவட்டம் தாட்கோ நகர் பகுதியில் வசித்து வருபவர் 30 வயதான நாகராஜ். இவர் திருவள்ளூரில் உள்ள செங்காடு பகுதியில் தனியார் பைக் ஷோருமில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய உறவினர் பெண்ணான நர்சிங் மாணவியை ஏப்ரல் 2ம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ஏப்ரல் 21ம் தேதி நாகராஜ், தனது மனைவியுடன் மெரினா கடற்கரையை சுற்றி பார்க்க திருவள்ளூரில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு வந்திருந்தார். செண்டரலில் இருந்து மெரினா கடற்கரைக்கு செல்ல ரயில் நிலையம் எதிரே உள்ள சாலையில் ஆட்டோ பிடிப்பதற்காக புதுமண தம்பதி இருவரும் நின்றுகொண்டு இருந்தனர்.
மனைவி திடீரென தனக்கு வயிறு வலிப்பதாக கூறினார். இதனால் கணவரை கூல்ட்ரிங்க்ஸ் வாங்கி வரும்படி கூறி கடைக்கு அனுப்பியுள்ளார். மனைவி கேட்டதால் நாகராஜ் அருகில் உள்ள கடைக்கு சென்று கூல்ட்ரிங்க்ஸ் வாங்கி கொண்டு வந்தார். திரும்பி வரும் போது மனைவி மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மொபைலில் தொடர்பு கொண்டபோது அதற்குள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. பல இடங்களில் தேடியும் மனைவியை காணவில்லை. இது குறித்து நடந்த சம்பவத்தை நாகராஜ் தனது வீட்டிற்கு தெரிவித்தார். உடனடியாக காவல் நிலையத்தில் தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தார். மாயமான இளம்பெண் நேற்று முன்தினம் புளியந்தோப்பு மன்னன் தெருவில் வசித்த் வரும் 19 வயது அருண்குமாருடன் காவல் நிலையத்தில் ஆஜராகினார்.
போலீசார் மாயமானது குறித்து இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அதில் “நர்சிங் கல்லூரியில் படிக்கும் போது, அருண்குமாரை உயிருக்கு உயிராக காதலித்தேன். இந்த விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்ததால் ஆசையை மறைத்து எனது விருப்பத்திற்கு மாறாக உறவினரான நாகராஜூக்கு அவசர அவசரமாக திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்தாலும் எனது காதலனை என்னால் மறக்க முடியவில்லை. இதனால் தான் திட்டமிட்டு எனது கணவரை மெரினா கடற்கரையை சுற்றி பார்க்க வேண்டும் என்று அழைத்து வந்தேன். எங்களது ப்ளான் படி வயிறு வலிப்பதாக கூல்ட்ரிங்க்ஸ் வாங்கி வர சொல்லி கடைக்கு அனுப்பினேன். எனது வருகையை ஏற்கனவே எனது காதலன் அருண்குமாரிடம் போன் மூலம் தகவல் அளித்திருந்தேன். அருண்குமாரிடம் சென்றுவிட்டேன் எனக் கூறினார். திருமணமான இளம் பெண் இன்னும் 18 வயது கூட நிரம்பாத 17 வயது சிறுமி என்பதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கு அனைத்து மகளிர் போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதன்படி அனைத்து மகளிர் போலீசார் சிறுமியின் கணவர் நாகராஜ் மற்றும் காதலன் அருண்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!