அடுத்த சர்ச்சை.. திருப்பதி தேவஸ்தான அன்னதான உணவில் பூரான்.. அதிர்ச்சி வீடியோ வைரல்!

 
திருப்பதி அன்னதானம்

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. இந்த சர்ச்சை இன்னும் முடிவதற்குள், சமீபத்தில் குட்கா பாக்கெட் மற்றும் சிகரெட் லட்டுவில் இருப்பது போன்ற ஒரு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


ஆனால் இது பொய்யான செய்தி என்றும் யாரும் நம்ப வேண்டாம் என்றும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.இதையடுத்து அடுத்த சர்ச்சை வெடித்துள்ளது. அதாவது திருப்பதி கோவிலில் உள்ள அன்னதான கூடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. சாப்பிட்ட ஒரு பக்தரின் தயிர் சாதத்தில் பூரான் கிடந்துள்ளது.

திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் பெற புதிய நடைமுறை!!

இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில், அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேவஸ்தானத்துக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!