தெருநாய்களைத் தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி... மாடு முட்டி ஒருவர் மரணம்!

 
மாடு

 
சமீபமாக தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் அடுத்தடுத்து தெருநாய் கடிகளுக்கு பொதுமக்கள் ஆளாகி வரும் நிலையில், தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சியாக தெருவில் சுற்றித் திரிந்த மாடு முட்டியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கால்நடைகள் தெருவில் சுற்றித் திரிவது வாடிக்கையாக இருந்து வருகிறது. பசுமாடுகள், காளைமாடுகள், ஆடுகள் ஆகியவை சாலைகளில் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

மாடு
இந்நிலையில், நேற்று ஒத்தக்கடை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு எதிரே சாலையில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று அவ்வழியாக சென்ற 3 நபர்களை அடுத்தடுத்து முட்டித் தள்ளியதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில் காரைக்குடி திருமயம் பகுதியில் சேர்ந்த லட்சுமணன் (64), தனது பேத்தியை பார்ப்பதற்காக மதுரை வந்திருந்தார். பின்னர் அங்கிருந்து டீக்கடையில் டீ குடிக்க சென்றபோது, அங்கு இரண்டு காளைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக லட்சுமணனை அந்த மாடுகள் முட்டித் தள்ளியது. இதில் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்தார்.

மாடு

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். லட்சுமணனை முட்டிய அதே காளை, மதுரையைச் சேர்ந்த செல்லத்தாயி (65) என்பவரையும், தூய்மைப் பணியில் ஈடுபட்ட ஒருவரையும் முட்டித் தள்ளியுள்ளது. தொடர்ந்து கால்நடைகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web