அமெரிக்காவில் அடுத்த அதிர்ச்சி... 30,000 பேர் வெளியேற்றம்... காட்டுத்தீ நகருக்குள் பரவியதால் பதற்றம்!

 
அமெரிக்கா காட்டுத்தீ

 கலிஃபோர்னியாவில் பரவி வரும் காட்டுத்தீ...நகருக்குள்  பரவியதால் பதற்றம்!அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவி வருவதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.  

வனப்பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீ பலத்த காற்று காரணமாக மற்ற பகுதிகளுக்கும் அதிவேகமாக பரவி வருகிறது.   பெரும் தொழிலதிபர்கள் வீடுகள் அமைந்துள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகர புறநகர் பகுதியை தீ சூழ்ந்துள்ளது. 

அப்பகுதியிலிருந்து மக்கள் உடனடியாக வெளியேற தீயணைப்புத்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து வாகனங்கள் உட்பட  உடமைகளை விட்டுவிட்டு சுமார் 30,000 பேர் வெளியேறியுள்ளனர்.  குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவியதால் ஏராளமான வீடுகள் பற்றி எரிகின்றன.

அமெரிக்கா காட்டுத்தீ

இதுவரை 5 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான வனப்பகுதி மற்றும் குடியிருப்பு பகுதிகளை காட்டு தீ அழித்து விட்டதாக மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வனத்தை ஒட்டிய லாஸ் ஏஞ்சலஸ் நகர பகுதியில் உள்ள 13000க்கும் மேற்பட்ட வீடுகள் ஆபத்தை எதிர்கொண்டதால் தீயினை கட்டுப்படுத்தும் பணியில் கலிஃபோர்னியா தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!