சென்னையில் அடுத்த அதிர்ச்சி... தம்பதியரை தெருநாய் கடித்து குதறிய அவலம்!

 
சுரேஷ்

சென்னையில் பூங்கா ஒன்றில் வளர்ப்பு நாய் சிறுமியைக் கடித்து குதறிய நிலையில், பலத்த காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் 2 மணிக்கு சிறுமிக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நடைப்பெற உள்ள நிலையில், அடுத்த அதிர்ச்சியாக சென்னையில் நடைப்பயிற்சி சென்ற தம்பதியரை நாய் கடித்து குதறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
சென்னை சூளைமேடு சர்புதீன் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(43). தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இவர் நேற்று காலை தனது மனைவி நீலாவுடன் (40) வீட்டின் அருகிலேயே நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளார் .

சுரேஷ்


அப்போது அதே பகுதியில் வசிக்கும் மல்லிகா என்பவர் வளர்த்து வரும் தெரு நாய் ஒன்று நீலாவின் தொடையில் கடித்து குதறியது‌. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர் சுரேஷ் நாயை விரட்ட முயன்ற போது நாய் அவரையும் விடாமல் துரத்திச் சென்று காலில் கடித்துக் குதறியுள்ளது. 

சுரேஷ்


இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், அவர்கள்  இருவரையும் நாயிடம் இருந்து மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து நீலா சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தெரு நாயை வளர்த்து வரும் மல்லிகாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே சென்னை நுங்கம்பாக்கத்தில் வளர்ப்பு நாய் ஒன்று கடித்து சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்று  பரங்கிமலை காவலர் குடியிருப்பில் காவலர் ஒருவரின் வளர்ப்பு நாய் 8 வயது சிறுவன் ஒருவனைக் கடித்தது பரபரப்புக்குள்ளானது. இந்நிலையில், சென்னையில் மேலும் ஒரு நாய்கடி சம்பவத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web