டெல்லியில் அடுத்த அதிர்ச்சி... மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து... 12 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன!

டெல்லியில் அடுத்த அதிர்ச்சி... மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து... 12 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன!

தெற்கு டெல்லியின் லஜ்பத் நகரில் உள்ள சவுத்ரி குழந்தைகள் கண் மருத்துவ மையத்தில் இன்று பிற்பகல் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் உடனடியாக 12 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கண் மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்து குறித்த வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்ட நிலையில், கரும்புகையின் கருமேகங்கள் மருத்துவமனைக் கட்டிடத்தில் இருந்து வெளியேறுவதைக் காணலாம். இன்று பகல் 11.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து 12 தீயணைப்பு வாகனங்களில் சென்றடைந்த வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். 

டெல்லியில் அடுத்த அதிர்ச்சி... மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து... 12 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன!

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் குறித்த தகவல் எதுவும் இன்னும் தெரியவில்லை.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web