அடுத்த அதிர்ச்சி... மீண்டும் போர் பதற்றம்... பாகிஸ்தானை குறிவைத்த தாலிபான்கள்.. எல்லையில் 15,000 வீரர்கள் குவிப்பு!
உக்ரைன் - ரஷ்யா போர் மூன்றாம் வருடத்தை நோக்கி நீடித்து வரும் நிலையில் அடுத்த அதிர்ச்சியாக பாகிஸ்தானை தாலிபான்கள் குறி வைத்துள்ளது மீண்டும் போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. சமீப காலங்களாக பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இரு நாடுகளும் தாக்கி கொள்ளும் சூழல் உலக நாடுகளை பதற்றமடைய செய்துள்ளன.
பாகிஸ்தான் எல்லையில் திடீரென 15,000 வீரர்களை ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள் குவித்துள்ளதால் இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மூன்றாம் உலக போரைத் தவிர்க்கும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டு வரும் நிலையில் புதிது புதிதாக போர் பதற்றங்கள் உருவாகி வருகிறது.
ரஷ்யா - உக்ரைன் போர் 3 வருடங்களாக நீடித்து வருவதைப் போலவே மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது. இஸ்ரேலுடன் ஈரான், லெபனான் நாடுகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷ்யாவைப் போலவே வடகொரியாவும் எப்போது வேண்டுமானாலும் அணுகுண்டு பயன்படுத்த தயங்கமாட்டோம் என்று அறிவித்திருப்பது மேலும் பதற்றத்தை அதிகரிக்க செய்கிறது.
இந்நிலையில் நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தானிடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது மேலும் பதற்றத்தை அதிகரிக செய்துள்ளது.
தாலிபான்களை உலக நாடுகள் யாரும் அங்கீகரிக்காத நிலையில் முதல் ஆளாக பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்து அவங்களை அங்கீகரித்தது. அவ்வளவு நட்பு நாடுகளாக இருந்த நிலையில் தற்போது இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது.
கடந்த டிசம்பர் 24ம் தேதி பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மீது பதிலடி தாக்குதலை தொடங்கியது பதற்றத்தை அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் போர் விமானங்கள் ஆப்கானிஸ்தான் வான் எல்லையில் பறந்து தாக்குதல் நடத்தியதை தாலிபான்கள் கடுமையாக கண்டித்தனர். அப்போதே இதற்கு பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என்று தாலிபான்கள் அறிவித்தனர்.
இந்நிலையில் தாலிபான்கள் 15 ,000 வீரர்களை பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மிர்அலி எனும் எல்லைப்பகுதியில் குவித்து வருகின்றனர். திடீரென எல்லையில் வீரர்கள் குவிக்கப்படும் நிலையில் பாகிஸ்தான் ராணுவமும் தீவிர கண்காணிப்பை தொடங்கி உள்ளது இருநாடுகளுக்கு இடையே போர் பதற்றத்தை உருவாக்கி உள்ளது உலக நாடுகளை கவலைக் கொள்ள செய்துள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!