கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59ஆக உயர்வு!

 
கள்ளச்சாராயம் பலி


 
 
கள்ளக்குறிச்சி  கருணாபுரம் கிராமத்தில் விஷச்சாராயம் குடித்து 100க்கும் மேற்பட்டோர் உடல் நலக்குறைவு காரணமாக விழுப்புரம் கள்ளக்குறிச்சி, புதுச்சேரி மருத்துவமனைகளில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர்.சிலரது நிலமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் மேலும் பலி அதிகரிக்க கூடும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கள்ளச்சாரய உயிரிழப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய  தமிழக அரசால் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

மரணம் கள்ளச்சாராயம்

அதன் தலைவராக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் கருணாபுரம் பகுதிக்கு நேரடியாக சென்று மெத்தனால் அருந்தி உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மருத்துவமனை
இன்று கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவங்கூரை சேர்ந்த 34 வயது இளைஞர் உயிரிழந்தார்.   அதே நேரத்தில் விஷச் சாராய வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில்  இதுவரை 12 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59ஆக  உயர்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!