பகீர் வீடியோ... வந்தே பாரத் ரயிலில்... நூலிழையில் உயிர் தப்பியவர்!

தீபாவளியை முன்னிட்டு இந்தியா முழுவதும் பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அந்த வகையில் இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் கேரளா திரூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்நிகழ்வு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், முதியவர் ஒருவர் திரூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்கிறார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்ததால் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் அவரை வரவேண்டாம் என கத்தில் கூச்சலிட்டனர். ஆனால் அவர் கேட்காமல் நடந்து கொண்டே இருந்தார். இதனால் பிளாட்பாரத்தில் இருந்தவர்கள் திகிலின் உச்சத்திற்கு சென்றுவிட்டனர்.
Narrow escape for a moron trying to cross the railway track while a #VandeBharatExpress was approaching the Tirur Railway station in Kerala.#VandeBharat #Kerala pic.twitter.com/UUTHRKRIYB
— Bobins Abraham Vayalil (@BobinsAbraham) November 12, 2023
தண்டவாளத்தின் குறுக்கே வந்தவரை பார்த்ததும் ரயில் ஓட்டுநர் ஹாரன் சத்தம் எழுப்பினார். அதிவேகமாக ரயில் செல்லும் போது உடனே திடீரென ரயிலை நிறுத்த முடியாது. சில மீட்டர் தூரம் சென்றுதான் நிறுத்த முடியும். அதற்குள் அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடலாம். இதனால் அதிக ஒலியுடன் ஹார்ன் சத்தம் எழுப்பினார் ரயில் ஓட்டுனர். சரியாக ரயில் பிளாட்பாரத்திற்குள் வேகமாக கடக்கவும், முதியவர் பிளாட்பாரத்தில் கால் வைத்து ஏறி உள்ளே வரவும் ஒரு வினாடிக்கும் குறைவான நேரமே இருந்தது. ஆனால் முதியவர் ஹார்ன் சத்தம் கேட்டு விநாடிக்கும் குறைவான நேரத்தில் முதியவர் தப்பித்து விடுகிறார்.
இருப்பினும் அவரை பலர் வசை பாடினர். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு நடக்கக்கூடாது என பலரும் அறிவுரை கூறத் தொடங்கிவிட்டனர்.
இந்த நிகழ்வை அங்கிருந்த பயணிகளில் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இவர் ஒட்டப்பாலத்தில் வசித்து வருபவர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் குறித்த விவரங்களை ரயில்வே போலீஸார் சேகரித்து வரும் நிலையில், விரைவில் வழக்குப்பதிவு செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!