இன்று முதல் கொடைக்கானலில் சுற்றுலா செல்ல ஒரே நுழைவுக் கட்டணம்!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இதுவரை, குணா குகை, தூண் பாறை, ஃபைன் ஃபாரஸ்ம், மோயர் சதுக்கம் என ஒவ்வொரு இடத்திலும் தனித்தனியாக நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. இதனால், கூட்டம் அதிகமான நேரங்களில் வரிசையில் நின்று நுழைவுக் கட்டணம் செலுத்தவே அதிக நேரமும் தேவைப்பட்டது. இதனால் கால நேரம் வெகுவாக விரயம் ஆனது.

இந்நிலையில், செப்டம்பர் 1ம் தேதி முதல் கொடைக்கானலில் குணா குகை, தூண் பாறை, ஃபைன் ஃபாரஷ்ட், மோயர் சதுக்கம் 4 இடங்களையும் சுற்றிப் பார்க்க ஒரே இடத்தில் கட்டணம் வசூலிக்கும் முறை பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வனத்துறை சுற்றுலா இடம் தொடங்கும் பகுதியான தூண் பாறையில் அனைத்து வனத்துறை சுற்றுலா இடங்களுக்கும் சேர்த்து பயணிகள் நுழைவுக் கட்டணம் செலுத்தி அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.

தற்போது வரை இந்த இடங்கள் அனைத்தும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. இங்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மக்கள் சுற்றிப் பார்க்க அனுமதி வழங்கப்படும். அதன்படி தமிழகம் மற்றும் வெளி மாநில பயணிகளில் பெரியவர்களுக்கு ரூ.30ம், சிறியவர்களுக்கு ரூ.20 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுபோல, வெளிநாட்டினருக்கு ரூ.1,000 நுழைவுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
