வேண்டிய வரம் அருளும் பஞ்சமி விரதமுறை, வழிபாடு.... !
அமாவாசை மற்றும் பௌர்ணமி முடிந்த 5ம் நாள் பஞ்சமி திதி. பஞ்ச என்றால் ஐந்து எனப் பொருள். பஞ்சமி தினம், விரதமிருந்து வாராகி அம்மனை வழிபடுவது சிறப்பு வாய்ந்த தினமாகும். சப்த கன்னியர்களான பிரம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கெளமாரி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோரில் பன்றியின் முகமும், பெண்ணின் உடலும் கொண்டவள் வாராகி. அந்த அன்னையை மகா விஷ்ணுவின் வராக அவதாரத்தின் பெண் வடிவம் என்றும் சொல்வதுண்டு. சைவம், வைணவம், சக்தி வழிபாடு ஆகிய வழிபாட்டு முறைகளை பின்பற்றுபவர்களும் வாராகியை வழிபட்டு வருகின்றனர்.

பஞ்சமி திதியில் விரதம் இருந்து வாராகி தேவியை வழிபடுவது, சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும். வீட்டில் வாராகி யந்திரம் வைத்திருப்பவர்கள், விக்கிரகம் வைத்திருப்பவர்கள், பால், தேன், இளநீர், பஞ்சாமிர்தங்களால் தேவிக்கு அபிஷேகம் செய்து, அர்ச்சிப்பது நன்மையளிக்கும். வாராகியை வழிபடுபவர்களுக்கு, மந்திர சித்தி, வாக்கு சித்தி கிடைக்கும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கபடும் நம்பிக்கை. இந்த தேவியை பூஜிப்பவர்களுக்கு, செய்வினை அண்டாது . வாராகியை வாசனைப் பூக்களால், குறிப்பாக சிவப்பு நிற பூக்களைக் கொண்டு பூஜிப்பது விசேஷமாக கருதப்படுகிறது.

கருப்பு உளுந்தில் செய்த வடையும், மிளகு சேர்த்த தயிர் சாதமும். சர்க்கரை வள்ளி கிழங்கும், சுக்கு சேர்த்த பானகமும், வாராஹி தேவிக்கு சிறப்பான நைவேத்தியங்கள். இவைகளை வைத்து வழிபாடு செய்திட வேண்டிய வரம் அருள்வாள் வாராஹி.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
