அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணி... லக்கேஜ் நிறைய இருந்ததாகக் காரணம்!

 
அபாய சங்கிலி

 இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தினசரி தேவைக்காக  ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். பயணிகளுக்கு அவசர தேவைகளுக்காக உடனடியாக ரயிலை நிறுத்தக்கூடிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.  அதன்படி பயணிகளுக்கு திடீர் உடல்நலக் குறைவு  ஆபத்து ஏற்பட்டால் உடனடியாக  பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுக்கலாம்.  இதனால் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டுவிடும் . ஆனால் சமீப காலமாகவே தேவையற்ற காரணங்களுக்காக இந்த செயலை செய்து வருகின்றனர்.  அந்த வகையில் சமீபத்தில் ஒரு பயணி ரயில் பயணத்தின் போது திடீரென செயினை பிடித்து இழுத்தார்.

அபாய சங்கிலி

அதனால் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன்படி  நான் நிறைய லக்கேஜ் கொண்டு வந்தேன். குடும்பத்தினர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.  இதனால் கூட்டத்திற்கு மத்தியில் என்னுடைய லக்கேஜ்களை ரயில் நிலையத்தில் இறக்க முடியாது. எனவேதான் செயினை பிடித்து இழுத்து நிறுத்தினேன். அபராதமாக நான் செலுத்தும் தொகை ரயில் நிலையத்தில்  இறங்கினால் ஆகும் செலவைவிட குறைவானது. எனவே நான் செயினை பிடித்து இழுத்தேன் எனக் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்படி காரணம் இல்லாமல் சங்கிலியை இழுத்தால் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை  சிறைத்தண்டனையும் ரூ1000  அபராதமும் விதிக்கப்படும்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web