அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்திரிக்கோலால் குத்தி கிழித்த நோயாளி!

 
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை

ராஜீவ் காந்தி அரசு பொது  மருத்துவமனையில் கத்திரிக்கோலால் பயிற்சி மருத்துவர் ஒருவரை நோயாளி குத்தி கிழித்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக பயிற்சி மருத்துவர்களும், மாணவர்களும் அந்த பகுதியில் திரண்டதால் பரபரப்பு நீடித்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமீப காலங்களாக மருத்துவர்களின் மீது நோயாளிகள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஹிஜாப் அணிந்திருந்ததற்காக பெண் மருத்துவர் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டது, தனியார் மருத்துவமனை ஒன்றில் கர்ப்பிணி பெண் உயிரிழந்ததால் மருத்துவமனை முழுவதுமாக வன்முறையாளர்களால் சூறையாடப்பட்டது என அடுத்தடுத்து நிகழ்ந்து வருகிறது

Patient stabbed a trainee doctor in rajiv gandhi hospital chennai

நேற்றிரவு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வரும் சூர்யா எனும் மருத்துவர், கல்லீரல் பிரச்சனை காரணமாக உள்நோயாளியாக பாலாஜி என்கிற நோயாளிக்கு  மருத்துவ பரிசோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது தனது கையில் போடப்பட்டிருக்கும் குளுக்கோஸ் ஊசியினை அகற்றக்கோரி சூர்யாவிடம் வாக்குவாதத்தில் பாலாஜி ஈடுபட்டார். குளுகோஸ் போய் கொண்டிருப்பதால், முடிந்தவுடன் கழற்றுகிறேன் எனக் கூறிய சூர்யாவை, அருகே மருத்துவ பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த கத்திரிக்கோலை எடுத்து, திடீரென யாரும் எதிர்பாராத நிலையில், மருத்துவர் சூர்யாவின் கழுத்தில் குத்தியுள்ளார். 

இதில் பலத்த காயமடைந்த மருத்துவர் சூர்யா, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  நோயாளி ஒருவர் பயிற்சி மருத்துவரைத் தாக்கிய செய்தி பரவியதும், மருத்துவமனை வளாகத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜீவ்காந்தி மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்

பயிற்சி மருத்துவர்களின் வேலை நிறுத்த போராட்டம் அறிந்து, அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்து, மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும், தாக்குதலில் ஈடுபட்ட நோயாளி பாலாஜி கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறி மாணவர்களிடம் உறுதிக்கூறியவுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கலைந்து சென்றனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web