பாஜகவை கவிழ்த்த அயோத்தி மக்கள்.. இது தான் காரணம்.. அகிலேஷ் யாதவ் சாடல்!

 
அகிலேஷ் யாதவ்

2024 - மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் முக்கிய பிரச்சாரமாக அயோத்தியில் ராமர் கோயில் இருந்தது. இதனால், ராமர் கோவில் அமைந்துள்ள அயோத்தியில் பா.ஜ.,வுக்கு பெரும் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வியடைந்தது.  ராமர் கோவில் தொகுதியில் இந்திய கூட்டணியின் அவதேஷ் பிரசாத் 51,567 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அயோத்தி ராமர்

பாஜக சார்பில் போட்டியிட்ட லல்லு சிங் 4,99,722 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். அயோத்தி தொகுதியில் பாஜக தோல்வி அடைந்தது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனிடையே, அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றது குறித்து அகிலேஷ் யாதவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதுகுறித்து அகிலேஷ் யாதவ் கூறியதாவது:- உத்தரபிரதேசத்தில் பாஜக அதிக இடங்களை இழந்திருக்கிறது. சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களித்த அயோத்தி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அகிலேஷ்

அயோத்தியில் பொய் வழக்குகள் போட்டு ஏழைகளின் நிலத்தை வலுக்கட்டாயமாக பறித்தது பாஜக. அவர்களது நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. ஏழைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டது. சந்தை விலைக்கு இணையாக நிலம் கையகப்படுத்தப்படவில்லை. அவர்கள் ஒரு புனித நோக்கத்திற்காக ஏழைகளை அழித்தார்கள். இதனால்தான் அயோத்தி மற்றும் பல தொகுதிகளில் பாஜகவுக்கு எதிராக மக்கள் வாக்களித்தனர் என்று நினைக்கிறேன்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web