கோவை மக்கள் உற்சாகம்... இன்று முதல் கோவை டூ மும்பை... முதல் பயணத்தை வெற்றிகரமாக துவங்கியது ஏர் இந்தியா விமானம்!

 
நாளை முதல் மதுரை துபாய் விமான சேவை!

இன்று ஏர் இந்தியா விமான நிறுவனம் கோயம்புத்தூரில் இருந்து மும்பை வரையிலான வழித்தடத்தில் தனது சேவையைத் துவங்குகிறது. தொழில் நகரமாக விளங்கும் கோவையில் தொழில் ந் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் அடிக்கடி வியாபார நிமித்தமாக வெளி மாநிலங்களுக்கு சென்று வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

கோவை மாநகரின் உள்கட்டமைப்பு வசதிகளும் சமீபகாலமாக பெருகி வருகின்றன. கோவைக்கு வந்து செல்பவர்களின் தேவைகள், வசதிகளை பூர்த்தி செய்யும் வகையில் ஏர் இந்தியா நிறுவனம் கோவை முதல் மும்பை விமான சேவையை இன்று முதல் தொடங்கியது. 

ஏர் இந்தியா
கோவை விமான நிலையத்தை பொறுத்தவரை தினசரி 23 உள்ளூர் விமானங்கள் மற்றும் சிங்கப்பூர், சார்ஜாவிற்கு செல்லும் 2 பன்னாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களில் தினமும் 8,750 பயணிகள் பயணம் செய்கின்றனர். கோவையில் இருந்து மும்பைக்கும், மும்பையில் இருந்து கோவைக்கும் கூடுதலாக விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இதனை ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்று காலை 6.30 மணிக்கு மும்பையில் இருந்து கிளம்பிய ஏர் இந்தியா விமானம், கோவைக்கு தனது முதல் பயணத்தை இன்று காலை 8.20 மணிக்கு வந்தடைந்து பூர்த்தி செய்தது. மறுமார்க்கமாக காலை  9 மணிக்கு கோவையிலிருந்து கிளம்பி 11 மணியவில் மும்பையை சென்றடைந்தது. 

ஏர் இந்தியா

கோவை மும்பை இடையே இன்டிகோ, விஸ்டாரா என 3 விமானங்கள் சேவை செயல்பட்டு வருகிறது. தொழில் ரீதியாக கோவையில் இருந்து மும்பை செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே போல் மருத்துவத்திற்காகவும், அலுவலக ரீதியாக சென்று வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் அடிப்படையில் கூடுதலாக இந்த விமான சேவை இயக்கப்பட இருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொழில் முனைவோர், அலுவலகப்பணி, மருத்துவத்திற்காக செல்பவர்கள் இந்த சேவைக்கு பெரும் வரவேற்பு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு சேவை மட்டுமல்ல பாரீஸ், வார்ஷா, நைரோபி, குவைத், தோகா, மஸ்கட் மற்றும் இஸ்தான்புல்  போன்ற வெளிநாட்டு நகரங்களிலிருந்தும் வந்து செல்ல பேருதவியாக என்கின்றனர் தொழிலதிபர்கள். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web