மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்தவர் கைது!

 
தீனதயாளன்

சென்னையில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்று மயிலாப்பூர். இங்கு தினமும் உள்ளூர் , வெளியூர், வெளிநாடுகளில் இருந்து எல்லாம் பக்தர்கள்  ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வர். திருவிழாக்காலங்களில் கூட்டம் அலைமோதும்.  இத்தனை பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தின் நுழைவாயிலில் மர்ம நபர் ஒருவர்  பிப்ரவரி  7ம் தேதி நள்ளிரவில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.

கபாலீஸ்வரர்

இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு புகார் தெரிவித்ததன் பேரில்  உடனடியாக கோவிலுக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் தீவைத்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் கோவில் நிர்வாகம் மயிலாப்பூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.  இந்த புகாரின் அடிப்படையில் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ய தொடங்கினர்.  வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபர் தேடப்பட்டு வந்தார்.  

கபாலீஸ்வரர் கோவில்


இந்நிலையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவர்   தீனதயாளன். இவர்  போலீசாரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மனநிலை பாதிக்கப்பட்ட இவர் தனது வீட்டையே தீ வைத்து கொளுத்தியவர் என போலீஸ்  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

திடீர் ராஜ யோகம்... இந்த 6 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டும்... வாய்ப்பைப் பயன்படுத்திக்கோங்க!

இந்த ராசிக்காரர்களின் தலையெழுத்தே மாறப் போகுது... 15 வருஷங்களுக்கு பின் ராகு புதன் சேர்க்கை!

From around the web