பாஜக 400 இடங்களில் ஜெயிக்கும் என கணித்தவர் கண்ணீர் விட்டு கதறல்... வைரல் வீடியோ!

 
பிரதீப் குப்தா

 
மக்களவை தேர்தலை முன்னிட்டு கருத்துக் கணிப்புகளும்  தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளும்  அடுத்தடுத்து வெளியாக தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே வெளியாகி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளன. குறிப்பாக, இம்முறை பாஜக அபரிமிதமான இடங்களை கைப்பற்றும் எனவும்,  காங்கிரஸ் பல மாநிலங்களில் படுதோல்வி அடையும் எனவும் கணிக்கப்பட்டு இருந்தது. மிகக்   குறிப்பாக ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம், இந்திய டூடே ஊடகத்துடன் இணைந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டன.  


அந்த கருத்துக்கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி 401 தொகுதிகளை வெல்லும் எனவும் இந்தியா கூட்டணி 150 இடங்களை மட்டும் பிடிக்கும் எனவும்  தெரிவித்திருந்தது. அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி தேசிய ஜனநாயக கூட்டணி 290+ தொகுதிகளிலும், காங்கிரஸ் 230+ தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன.  பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி ஆட்சி அமைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்நிலையில் ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் பிரதீப் குப்தா தனது கணிப்பு முற்றிலும் தவறாக போனதை அடுத்து, தொலைக்காட்சி சேனலின் நேரலை விவாதத்தில்  கண்ணீர்விட்டு கதறினார்.  அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஆக்ஸிஸ் மை இந்தியா மட்டுமின்றி பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு பெரும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக கணித்திருந்தனர். அத்தனை கணிப்புகளும் இன்று தவிடுபொடியாகிவிட்டது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web